செவ்வாய், 29 மே, 2012

தமிழர் வீரமும் பலமும் -இளவட்டக்கல்


முனைவர் நா.இளங்கோ
தமிழ் இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8



புதுக்கோட்டை மாவட்டம் திருமய்யம் கோட்டையை ஒட்டிய கோயில் வளாகத்தில் கவனிப்பாரற்றுக் கிடக்கும் இளவட்டக்கல். 



இளவட்டக் கல்லைச் சுமக்கப் போவதுபோல் பாவனை காட்டும் 
முனைவர் நா.இளங்கோ

இளவட்டக்கல்:
சென்ற நூற்றாண்டுகளில் தமிழகத்தின் தென்மாவட்டங்களில், குறிப்பாகப் பாண்டி நாட்டில் இந்த இளவட்டக் கல்லை தூக்கிச்சுமக்கும் வீரவிளையாட்டு நடப்பதுண்டு. இளவட்டக் கல்லைத் தூக்கிச் சுமக்கும் இளைஞனுக்கே தம் பெண்ணை மணமுடித்துத் தருவதாக மறவர் குலத்தில் ஒரு வழக்கமுண்டு. இன்றைக்கு அந்த வழக்கம் மறைந்துபோய் விட்டாலும் தென்மாவட்டங்களில் பல சிற்றூர்களில் இன்றும் இளவட்டக் கல்லைச் சுமக்கும் போட்டி நடத்தப்படுகிறது. வென்றவர்களுக்குப் பரிசுகள் உண்டு. (பெண் கொடுப்பதில்லை)

இளவட்டக்கல் பொதுவாகச் சுமார் 100 கிலோ எடைகொண்டதாகவும். முழு உருண்டையாக வழவழவென்று எந்தப்பிடிப்பும் இல்லாமல் கைக்கு அகப்படாத வடிவத்தில் இருக்கும். இளவட்டக் கல்லுக்குக் கல்யாணக் கல் என்ற சிறப்புப் பெயரும் உண்டு.

இளவட்டக்கல்வைச் சுமப்பதில் பல படிநிலைகள் உண்டு.
முதலில் குத்தங்காலிட்டு உட்கார்ந்த நிலையில் கல்லை இருகைகளாலும் சேர்த்தணைத்து இலேசாக எழுந்து கல்லை முழுங்காலுக்கு நகர்த்தி, பின்னர் முழுதாக நிமிர்ந்து கொஞ்சம் கொஞ்சமாகக் கல்லை நெஞ்சின் மீது ஏற்றி, பின்னர் தோள்பட்டைக்கு நகர்த்தி முழுதாகச் சுமக்க வேண்டும். தோள்பட்டைக்கு இளவட்டக்கல் வந்துவிட்டால் அடுத்துக் கல்லோடு கோயிலை வலம்வருவது குளத்தை வலம்வருவது எனச் சாதனைகளைத் தொடரலாம்.

புதுமாப்பிள்ளைகளுக்குக் கருப்பட்டிப் பணியாரம் செய்துகொடுத்து அவரை இளவட்டக்கல்லைத் தூக்கச் சொல்லும் பழக்கம் முன்னர் நடைமுறையில் இருந்ததாம். தமிழரின் உடல்பலத்திற்கும் வீரத்திற்கும் சாட்சியாகத் திகழ்ந்த இந்த இளவட்டக் கற்கள் இன்றைக்குப் பல ஊர்களில் தம்மைத் தூக்கிச் சுமப்பார் யாரும் இல்லாமல் பாதியளவு மண்ணில் புதைந்துகிடக்கும் பரிதாபத்தை நாம் காணலாம்.

1 கருத்து:

மதுரா. வேள்பாரி சொன்னது…

கல்லைத் தூக்குவீர்ளோ
என்னமோ தெரியாது அய்யா
சொல்லைத் தூக்குவதில்
உங்களுக்கிணை யாருமில்லை.

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...