வெள்ளி, 16 அக்டோபர், 2009

சிங்கப்பூரில் அசைவ தாவரம்

சிங்கப்பூரில் அசைவ தாவரம்

பேராசிரியர் முனைவர் நா.இளங்கோ,
இணைப் பேராசிரியர்,
தமிழ்த்துறை,
பட்ட மேற்படிப்பு மையம்,
புதுச்சேரி.

தாவரவகைகளின் வழக்கமான உணவு ஸ்டார்ச். இந்த உணவைத் தாவரங்கள் சூரியஒளி, கார்பன் டை ஆக்ஸைடு, தண்ணீர் இவைகளைக் கொண்டு தாமே தயாரித்துக்கொள்ளும். எனவே பொதுவில் தாவரங்கள் சைவ உணவுப் பழக்கமுள்ளவை. இவை அனைவருக்கும் தெரிந்த தகவல்கள். ஆனால் தாவரங்களில் அசைவ உணவு உண்ணும் தாவரங்களும் உண்டு. அதில் ஒருவகைதான் நெபந்தஸ். (நெபந்தஸ் பற்றிய கூடுதல் தகவல்களுக்கு இந்த http://en.wikipedia.org/wiki/Nepenthes விக்கிப்பீடியா பக்கத்தைப் பார்க்கவும்)

இது ஒரு விசித்திரமான செடி. நெபந்தஸிலும் பல இனங்களும் பல வகைகளும் உண்டு. இந்த நெபந்தஸ் தாவரத்தின் இலைகளின் ஒருபகுதி குவளைகள் போன்ற வடிவில் அமைந்திருக்கும். அதற்கு ஒரு மூடியும் இருக்கும். இந்தக் குவளை வடிவம் பல வண்ணங்களில் பல டிசைன்களோடும் பலவித வாசனைகளோடும் பூச்சிகளை ஈர்க்கும் விதத்தில் இருக்கும். குவளைகளின் அழகு மற்றும் வாசனைகளில் மயங்கிப் பூச்சிகள் குவளையின் உள்ளே நுழைந்ததும் குவளை மூடிக்கொள்ளும். அப்புறம் அந்தக் குவளைகள் நமது வயிறுபோலச் செயல்பட ஆரம்பிக்கும். செரிமானத்திற்கான சில எனசைம்களைச் சுரந்து பூச்சியை முழுசாக உறிஞ்சி சக்கையை விட்டுடும்.

ஆச்சரியமா இருக்கு இல்லையா? நான் எனது பள்ளி நாட்களில் படித்த தகவல்கள் இவை. அன்று முதல் நெபந்தஸ் வகைச் செடிகளைப் பார்ப்பதில் மிகுந்த ஆர்வமுண்டு. நான் மிகவும் ரசித்துப் பார்த்துப் படமெடுத்த சிலவகை நெபந்தஸ் குவளைகள் மற்றும் செடிகளை எங்கள் பார்வைக்கும் விருந்தாக்குகிறேன்.















இந்தப் படங்கள் சென்ற மாதம் 2009 செப்டம்பர் 14 ஆம் நாள் சிங்கப்பூர் ஆர்கிட் தோட்டத்தில் என்னால் படம்பிடிக்கப்பட்டவை.

கருத்துகள் இல்லை:

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...