வெள்ளி, 29 பிப்ரவரி, 2008

வாழ்தல் பொருட்டு- கவிதை

வாழ்தல் பொருட்டு-

மலையருவி

பூமிப் பந்தின்
கடைசி வரவு
மனிதர்கள்

பல்லூழிகளாய்ப் பரிணாமம்
புல்லாய்ப் பூண்டாய்
செடியாய் மரமாய்
பறவையாய் விலங்காய்
மனிதர்களாய்

பூமிப் பந்தின்
கடைசி வரவு
மனிதர்கள்

மனிதர்கள் வாழ
மற்றவை மடிவதா?

இயற்கையின் கூண்டில்
மனிதன் குற்றவாளியாய்

மனிதன் வாழ பூமி வேண்டும்
பூமி வாழ மனிதன் தேவையில்லை

வாழ்தல் பொருட்டு…?

1 கருத்து:

இன்பா (எ) ச.சிவானந்தம் சொன்னது…

வாழ்தல் பொருட்டு...

கவிதை படித்தேன்
களிப்புற்றேன்.

மனிதர்களின் தன்னலத்தால்
இயற்கை அழிவதை எண்ணி
கவலையுற்றேன்.

உனது எனது என்று
இயற்கையைப் பங்குபோடும்
வேடிக்கை மனிதர்களுக்கு . . .

இயற்கையைச் சுரண்டி
இன்பம் காணும்
ஏளன மனிதர்களுக்கு . . .

உயிர்களைக் கொன்று
உடல் கொழிக்கும்
சாக்கடை மனிதர்களுக்கு . . .

வாழ்தல் பொருட்டு
ஒரு சவுக்கடி.

பயணம் தொடர
பாராட்டுக்கள்!

இவன்,
உங்கள் மாணவன்.
anbudaninbaa.blogspot.com

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...