செவ்வாய், 21 மே, 2019

சாளுவன் குப்பம் - சங்ககாலக் கோவில் -06-01-2019

முனைவர் நா.இளங்கோ

தமிழ்ப் பேராசிரியர்
புதுச்சேரி-8

புலிக்குகை (அ) யாளிக்குகை
கடந்த வாரம் செனனை செல்லும் வழியில் நானும் (முனைவர் நா.இளங்கோ தோழர் சின்ன.சேகரும் சாளுவன் குப்பம் பகுதியில் சில வரலாற்றுத் தடயங்களைப் பார்வையிட்டோம்)
மாமல்லபுரத்தில் இருந்து 5 கி.மீ. தொலைவில் கிழக்குக் கடற்கரைச் சாலையில் சென்னைக்குச் செல்லும் வழியில் கடற்கரையை ஒட்டி யுனஸ்கோ அங்கீகாரம் பெற்ற இந்தியத் தெரல்லியல் துறையின் பராமரிப்பில் உள்ள தொன்மைச் சிறப்பு வாய்ந்த பல்லவர் காலக் புலிக்குகை உள்ளது. 
இந்தக் குடைவரை மேடை புலிக்குகை என்று
அழைக்கப்பட்டாலும் இங்கே புலிச் சிற்பங்கள் எதுவும் கிடையாது. இங்குள்ள சிற்பங்களைக் காணும்போது அவை யாளி அல்லுது சிங்கத்தின் தலைமைய ஒத்துள்ளன. இதை "யாளிக்குகை" அல்லது "சிம்மக்குகை" என்றழைப்பதே பொருத்தமாக இருக்கும்.
சிறிய பாறையொன்றைக் குடைந்து இக்குகை
உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் குடைவரை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான ஒரு மேடை போன்று உள்ளது. இங்கே கருவறைகள் எதுவும் இல்லை. முகப்பில் இந்த மண்டபத்தைச் சுற்றி 16 யாளி அல்லது சிங்கத் தலைகள் அரை வட்ட அமைப்பில் செதுக்கப்பட்டுள்ளன.
ஏனைய குடைவரைகளில் இருந்து இப்புலிக்குகை வேறுபட்டுள்ளது. இக்குடைவரையை ஒரு கோயில் என்று சிலரும், நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான ஒரு மேடையாக இருக்கலாம் என வேறு சிலரும், முன்னேயுள்ள திடலில் நிகழ்ச்சிகளை மன்னன் பார்ப்பதற்கான மேடையே சிலரும் கருதுகின்றனர்.
புலிக்குகைக்கு அருகில் உள்ள சிவன் கோவில் கல்வெட்டில் இவ்விடம் இறைவன் அல்லது அரசன் எழுந்தருளும் இடம் எனப் பொருள்படும் "திருவெழுச்சில்" என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

முனைவர் நா.இளங்கோ - புலிக்குகை

முனைவர் நா.இளங்கோ - புலிக்குகை

புலிக்குகை

சாளுவன் குப்பம் - சங்ககாலக் கோவில் -2
அதிரணசண்ட பல்லவேஸ்வரம்: 
புலிக்குகையை ஒட்டி 200 மீட்டர் இடைவெளியில் பல்லவர் காலக் குடைவரைகளுள் ஒன்றான சாளுவன்குப்பம் அதிரணசண்ட பல்லவேஸ்வரம் என்ற சிவன் கோவில் உள்ளது. பாறையொன்றின் கிழக்குப் பக்கத்தில் குடைந்து, உருவாக்கப்பட்டுள்ள இக்கோயில் கடலை நோக்கி உள்ளது.
நீள்சதுரத் தள அமைப்பைக் கொண்ட இக்குடைவரையின் பின்புறச் சுவரில் சோமாஸ்கந்தர் உருவம் புடைப்புச் சிற்பமாகக் குடையப்பட்டுள்ளது. கருவறையின் நடுவில் உள்ள குழியில் 16 பட்டைகளுடன் கூடிய இலிங்கம் பொருத்தப்பட்டுள்ளது. முகப்பில் இரண்டு பக்கச் சுவர்களுடனும் ஒட்டியபடி இரண்டு அரைத்தூண்களும், நடுவில் இரண்டு தூண்களும் அமைக்கப்பட்டுள்ளன.
மண்டபத்தின் இடது மற்றும் வலதுபுறப் பக்கச் சுவர்களில் இரண்டு கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. இடது புறம் 16 வரிகளடங்கிய 6 செய்யுட்களைக் கொண்ட தேவநாகரிக் கல்வெட்டும் வலப்புறம் 17 வரிகளடங்கிய 7 செய்யுட்களைக் கொண்ட பல்லவ கிரந்தக் கல்வெட்டும் அமைந்துள்ளன. இக்கல்வெட்டுக்கள் இக்கோயிலை அதிரணசண்ட பல்லவேஸ்வர கிருஹம் எனக் குறிப்பிடுகின்றன. அதிரணசண்டன் என்னும் விருதுப் பெயர் கொண்ட இராஜசிம்ம பல்லவன் காலத்தில் இக்குடைவரை வெட்டப் பட்டிருக்கலாம்.
இக்கோயிலுக்கு எதிரே இருக்கும் பாறையில், கொற்றவை மகிஷாசுரனுடன் போரிடும் காட்சி புடைப்புச் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. இச்சிற்பத்தில் ஆறு கரங்களுடன் காணப்படும் கொற்றவை மகிஷனுடன் போர் புரிகிறாள்.

முனைவர் நா.இளங்கோ - அதிரணசண்ட பல்லவேஸ்வரம்

அதிரணசண்ட பல்லவேஸ்வரம்

மகிஷாசுரமர்த்தினி

சாளுவன் குப்பம் - கல்வெட்டு



கருத்துகள் இல்லை:

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...