வெள்ளி, 15 மே, 2015

முனைவர் நா.இளங்கோ பிறந்தநாள் - சிங்கப்பூரில் கொண்டாட்டம்

முனைவர் நா.இளங்கோவின் பிறந்தநாள் 29-04-1959 இந்த ஆண்டு சிங்ப்பூரில் கொண்டாடப்பட்டது. முனைவர் இரத்தின.வேங்கடேசன் தமது சிங்கை இல்லத்தில் மிகச்சிறப்பாக ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.
சிங்கப்பூரின் முத்த பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான திரு. பட்டாபிராமன் கொண்டாட்டத்தில் பங்கேற்றதோடு முகநூலிலும் பகிர்ந்து கொண்ட பகிர்வினை இங்கே மறுபதிவு செய்கிறேன். வலைப்பதிவர்களின் பார்வைக்காக...



பாரதிதாசன் பிறந்த நாள் 
இளங்கோவுக்கும் அதே நாள்
!
பாவேந்தனின் 125 பிறந்த நாள் நேற்று!
புதுவைக்காரர்களுக்கு எப்போதும் ஒரு தனிச் செருக்கு உண்டு! தமிழ் கூறும் நல்லுலகம் போற்றிப் புகழும் பாரதிதாசனையும், பாரதியையும் அதிகம் சொந்தம் கொண்டாடுவதில் மற்றவர்களைவிட தங்களை உயர்த்திக் கொள்வதில் பெருமைப்படுவர்.
பாவேந்தரின் பிறந்த நாளைக் கொண்டாட நேற்று மாலை ஓர் இல்ல உபசரிப்பை ஏற்பாடு செய்திருந்தார் முனைவர் இரத்தின வெங்கடேசன்.மிகத் தெரிந்த ஒரு சிலர் தான் அழைக்கப்பட்டிருந்தனர்.
நானும் கவிஞர் பொன்னடியானும் அந்தச் சிலரில் சிலர்.
அங்கே கேக் வெட்டப்பட்டது; கவிதைகள் வாசிக்கப்பட்டன; பாராட்டுகள் வழங்கப்பட்டன. பரிசுகள் தரப்பட்டன. யாருக்கு என்கிறீர்களா? அங்கே அமர்ந்திருந்த பாரதிதாசன் அவர்களுக்கு! பாரதிதாசனா? சரி சரி..இதற்கு மேல் புதிர் போட்டால், நீங்கள் 'delete'க்குப் போய்விடுவீர்கள்!
நேற்றைய 
எளிமையான பாரதிதாசன் பிறந்த நாள் விழாச் சிறப்பு அனைத்தும் 
பாவேந்தர் பிறந்த அதே 29/4ல் , அதே புதுவை மண்ணில் பிறந்த எளிய முனைவர் நா..இளங்கோ அவர்களுக்குத் தான். பாரதிதாசனாக அமர்ந்திருந்தவர் பொங்குகவி பொன்னடியான். ரத்ன வெங்கடேசனுக்கு ஒரு கல் - இரு மாங்காய்!
பிறந்த தேதி, பிறந்த மண், கற்றறிந்த தமிழில் பாவேந்தர் கலவை, பாரதி தாசன்-பாரதி புகழ் பரப்பும் மனப் பாங்கு, செந்தமிழ்ச் செயல் திறம் மிக்க உணர்வு, தாகத்திற்கு த் தமிழ் அருந்தும் தகைமை.... 
இத்தனைக்கும் முழு உரிமை பெற்ற முனைவர் இளங்கோவின் பிறந்த நாளை முன்னின்று நடத்தியவர், பாவேந்தரின் நல்லுயிரைக் கவர்ந்த எமனை நேரில் கண்ட கலைமாமணி பொன்னடியான். சாகும் வரை அவருடன் வாழ்ந்த வாரிசுக் கவிஞர் பொன்னடியான், பாவேந்தரைப் புகழ்ந்து மகிழ்வதை அன்றாட அனுஷ்டானமாகக் கொண்டு வாழும் ஒரு பேராசியருக்குப் பெருமை சேர்த்தது பொருத்தமோ பொருத்தம்!,
பாவேந்தர் விழாவில் பங்கேற்க வந்த கவிஞர்கள் தி.கோவிந்தராசு,இறைமதி, கி.கோவிந்தராசு, லலிதா சுந்தர், ஆசிரியை உஷா, ரசீனா நிலோபர், ராமசாமி, ஸ்டாலின்போஸ், கருணாக்கரசு ஆகியோர் ஆசை தீரக் கவிதை மழை பொழிந்தனர். பேச்சாளாரா, கவிஞரா என இன்னும் முடிவு செய்ய முடியாத, நல்ல புரவலராக நம்மொடுள்ள நண்பர் ஜோதி மாணிக்கமும், அவரது அன்பு மனைவி திருமதி மலரும் தம்பதி சமேதராக வந்து வாழ்த்தியது, நிகழ்ச்சிக்கு கனம் சேர்த்தது.
கட்டாந்தரையிலேயே மேயத் தெரிந்த கவிஞர்களை, பசும்புல் தரையில் கட்டவிழ்த்து விட்டால் கேட்க வேண்டுமா?
தலைமை தாங்கிய பொன்னடியான்,1970களில் தன் கல்லூரி உரைகளைக் கேட்டு மகிழ்ந்த மாணவ இளங்கோவின் தமிழாற்றலைப் புகழ்ந்தார்.
பேச்சுக் கலை மூலம் மேடைதனை ஆளும் மாட்சி தெரிந்த இளங்கோவை, "மூப்பிலாத் தமிழுக்கு முதல் மகன் நானென்று சாட்சியம் சொன்னவனே" என்றார், புதுவையின் புத்துணர்ச்சிக் கவிஞர் தி.கோவிந்தராசு.
'என்றும் எங்கள் மனங்களில் குடி கொண்டவர். எப்போதும் எங்கள் அன்பிற்குப் பாத்திரமானவர்' என்றவர் .அன்பழகன்.
ஊருக்கே இலக்கியத்தை ஊட்டி ஊட்டி வளர்த்த இளங்கோவை 'நற்றமிழ் நாவலர்' என்றார் இறைமதி.
'அவையே போற்றும் ஞானவித்து' என்று சொல்லி மகிழ்ந்தார் லலிதா சுந்தர்.
'இன் தமிழ் நேசன் - என் தமிழ் ஆசான்' என்ற இளங்கோவின் மாணவி-ஆசிரியை உஷா சுருக்கெழுத்தில் சுகம் வீசினார்.
மனித நேயக் கருத்துக்களைப் பாட்டில் புதைத்த இளங்கோ,' பாண்டி மண்ணில் வாழ்ந்து வரும் மலையருவி' எனப் புகழ்ந்தவர் கி.கோவிந்தராசு.
வயது வித்தியாசம் காட்டாமல், கலந்து பழகத் தெரிந்தவர் என்பது ஸ்டாலின் போசின் ஆய்வு.
கவிஞர் நிர்மலாவின் முகநூல் கவிதை வரிகளை நினைவு படுத்தினார் சத்திரியக் கவிஞன் கோ.கண்ணன்.
தேன் தேடும் ஈக்களாக நாங்கள் சுற்றிப் பறந்தபோது, எங்கள் முன் மதுக் கோப்பையாகத் தெரிந்தவர் இளங்கோ என்ற கவிஞர் ராமசாமியின் சொற்களில் மயக்கம் இருந்தது.
முதன் முறையாக திருமதி மலர் ஜோதிமாணிக்கம் பேசக் கேட்டேன். 'நூலோ, பேச்சோ எதைப் படிப்பது - எதைக் கேட்பது என்ற முடிவு எடுக்கும் நேரம் வரத்தான் செய்கிறது. முனைவர் இளங்கோவின் விஷயத்தில் இப்படிப்பட்ட நேரம் வருவதில்லை' என்றார். அர்த்தம் தொனித்த வார்த்தைகள்.
மாணவியாக, இன்று ஆசிரியையாக முனைவர் இளங்கோவின் தமிழை ரசிப்பவள் நான் என்று இனிய குரல் எழுப்பியவர் ரசீன நிலோபார்.
புதுச்சேரிக்காரர் இவர் - மரபுத் தமிழ் எனும் போதைக்கடிமையானவர் எனும் பொருள்பட வெண்பாக் கீற்று ஒன்றை வீசி எறிந்தார், மற்றவரைப் பேசி- ஏசி மகிழும் நல்ல கவிஞர் கருணாக்கரசு.
ரத்ன வெங்கடேசனின் நேரம்! இலக்கிய 'வாத்தியார்' இளங்கோவின் காலில் நெஞ்சு படப் பாராட்டினார். மாணவ-ஆசிரிய உறவுக்கும் மேற்பட்ட குடும்பப பிணைப்புகளை, உற்ற நண்பனாக - ஆசிரியனாக-இருந்து அவர் நலம் பேணும் நற்பண்புகளை நெகிழ்வுடன் குறிப்பிட்டார் முனைவர் வெங்கடேசன்.
நெகிழ்வுக்கு நெகிழ்வு சேர்த்தவர், நன்றி கூறிய பேராசிரியர் நா. இளங்கோ.
'நண்பர்கள் தோட்டம்' சஞ்சிகையில் முதல் வெண்பா எழுதியதையும், பாராதிதாசன் மண்ணில் விழுந்து புரண்டு உடலில் ஒட்டிக் கொண்ட தமிழையும் , இன்றும் தனக்குப் பிடித்த பேச்சாளர்கள் கவிஞர் பொன்னடியானும், ஸ்டாலின் குணசேகரனும் இருப்பதை உணர்த்தியும், ரத்ன வெங்கடேசனுடனான பந்த பாசம், தமிழ்ப் பாசம் போன்றது எனவும் ஏற்புரை தந்தார்.
நானும் பேசினேன்- அவரை வாழ்த்தினேன்.

"அங்கே கூடி இருந்த அத்தனை பேரும் 'வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன் என்றனர். என்னால் இவரை வாழ்த்தவும் முடியும்-வணங்கவும் முடியும். வாழ்த்தும் தகுதி வயது என்றால், வயதை எக்கச்சக்கமாக 'ஸ்டாக்' செய்து வைத்திருக்கிறேன். அதே நேரத்தில் என்னால் வணங்கவும் முடியும் - அந்த வணக்கம் அவரின் தமிழுக்கு! " --.பி.ராமன்.

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...